SEVEN PRINCIPLES TO LEARN FROM AN EAGLE -Part 01 - Translation
"கழுகும் அதன் 7 கொள்கைகளும்”
.... பாகம் 01
.
.
Eagle is a great bird. It has sharp eyesight and the talent to fly to great heights.
கழுகு ஓர் அற்புதமான பறவை. அதற்குச் சிறப்பான பார்வையும், உயரப் பறக்கும் ஆற்றலும் உள்ளன.
Eagle's image appears in the national flags of many countries and is also displayed in many products. The main reason for this are its special characteristics.
உலக நாடுகளின் சின்னங்கள் முதல் வியாபாரப் பொருட்கள் பலவற்றை அலங்கரிப்பதற்குக் காரணம் அதன் சிறப்பான பண்புகள் ஆகும்.
The following seven qualities of an eagle will help any person who wants to lead a great life.
கழுகிடம் காணப்படும் ஏழு குணாம்சங்கள் உயர்வான மனித வாழ்வை விரும்பும் ஒவ்வொருவருக்கும் அவசியம்.
*** ***
1. *Eagles fly Alone and at High Altitudes.*
They don't fly with sparrows, ravens, and other small birds. These birds dont have the abilty to fly at those heights. Eagles fly only with eagles.
கழுகுகள் தனியாக, உயரத்தில் பறக்கும். அவை ஏனைய பறவைகளுடன் சேர்ந்து பறக்கது. ஏனைய பறவைகளும் கழுகுகள் பறக்கும் உயரத்தில் பறக்க முடியாது. கழுகுகள் கழுகுகளுடன் மட்டும் பறக்கும்
2. *Eagles have an Accurate Vision.*
They have the ability to focus on something as far as 5km away.
கழுகுகள் கூர்மையான பார்வை உடையன. ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள ஒன்றை அவற்றால் தெளிவாகப் பார்க்க முடியும்.
Once an eagle had selected its prey, it will not move his focus from the prey until he grabs it.
கழுகு ஓர் இரையைப் பார்த்ததும், அது தன் பார்வை ஒடுக்கி அதைப் பிடிக்க முயலும்.
No matter whatever obstacles it comes across it will never get distracted.
தடைகள் வந்தாலும், அது தன் கவனத்தை திசை திருப்பாது, தன் பார்வையை இரையின்மேல் வைத்திருக்கும்.
Rapt attention and focus will fetch you success.
தரிசனமும் தடைகளின்போது சிதறாத கவனமும் வெற்றியடையும்!
3. *Eagles do not Eat Dead things like the vultures do. They Feed only on Fresh Prey.*
பிணந்தின்னிக் கழுகு போல் கழுகு அழுகியவை மற்றும் இறந்தவற்றை உண்ணாது. அது புதிதான இரையினையே உண்ணும்.
What to eat and what not to eat. Eagles make a correct judgement.
எதை உண்பது? எதைத் தெரிவது? எதை விலக்குவது? என்பதில் கழுகுகள் சரியான தெரிவை எடுக்கும்!
4. *Eagles Love the Storm.*
The eagle uses the storms wind to lift itself higher.
கழுகுகள் புயலை விரும்புகின்றன. புயல் காற்றின் மூலம் அவை மேகங்களின் மேலாக உயர்த்தப்படுகின்றன.
The eagle uses the raging storm to lift itself above the clouds and an opportunity to glide and rest its wings.
இதனால், அவை சிறகினை விரித்து காற்றில் மிதக்கவும், அதன் மூலம் இளைப்பாறவும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன.
In the meantime, all the other birds hide in the branches and leaves of the tree.
அதே நேரம், மற்றப் பறவைகள் மரக்கிளைகளில் ஒளிந்து கொள்ளும்.
The challenges like a storm are turned as an opportunity to rise high.
வாழ் நாட்களில் ஏற்படும் புயல்கள் போன்ற சவால்கள், உயரப் பறக்க கிடைக்கும் சந்தர்ப்பங்களாகவும், நன்மையாகவும் மாற்றிக் கொள்ளப்படுகின்றன!
5. *When a Female Eagle Meets a Male Eagle* and they want to mate, she flies down to earth, picks a twig.
பெண் கழுகு ஓர் ஆண் கழுகை சந்தித்து உறவு கொள்ளு முன், அது ஆண் கழுகுடன் நிலத்திற்குச் சென்று சிறு தடி போன்ற குச்சியை எடுக்கும்.
Once she has reached a height high enough for her, with the male following her, she drops the twig and watches.
பின்பு மேலே ஆணுடன் உயரத்திற்குப் பறந்து சென்று அந்தக் குச்சியினைக் கீழே போட்டுவிட்டு அவதானித்துக் கொண்டிருக்கும்.
The male eagle chases after the twig and catches it before it reached the ground, then bring it back to the female eagle.
நிலத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும் குச்சியை ஆண் கழுகு விரட்டிச் சென்று, அது நிலத்தில் விழு முன் பிடித்து, அதை உயரப் பறக்கும் பெண் கழுகிடம் சேர்ப்பிக்கும்.
The female eagle grabs the twig and drop the twig again for the male eagle to chase.
பெண் கழுகு மீண்டும் குச்சியைக் கீழே போட்டுவிடும். ஆண் கழுகு பிடிப்பதற்காக கீழே செல்லும்.
This goes on for hours with the height increasing each time until the female eagle is assured that the male eagle has mastered the art of picking the twig which shows commitment.
இவ்வாறு குச்சியை வீழ்த்துவதும், எடுத்து வருவதுமாக பல மணித்தியாலங்களுக்கு பரீட்சை நடைபெறும். பெண் கழுகு ஆண் கழுகிடமுள்ள பொறுப்புணர்வை நிச்சயப்படுத்திக் கொள்ளும்.
Then and only then will she allow him to mate with her.
அதன் பிறகு தான் அது உறவு கொள்ள இடமளிக்கும்.
The female will trust the male only after the test.
கழுகு பரீட்சையின் பின்பே நம்பிக்கை வைக்கும்.
Before a long term relationship starts patience and responsibility of the pair is put to test.
உறவை ஏற்படுத்திக் கொள்ள முன் பொறுப்புணர்வு சோதனைக்கு உள்ளாக்கபடுகின்றது!
......... ..part 01 ends
எழுதியது :யாரோ
திரட்டியது, மெருகு ஏற்றியது :
எழிலரசன் வெங்கடாசலம்
ஆங்கில பயிற்சியாளர்
ஈ3 இன்ஸ்டிடியூட்
சேலம்.
For more (part 02) click here
Comments