Skip to main content

BLIND COUPLE gets food items from AEKALAIVAN's TRUST

BLIND COUPLE gets food items from AEKALAIVAN's  NAMBIKKAI VAASAL TRUST


AEKALAIVAN does an excellent job of going to the homes of DIFFERENTLY ABLED PERSONS in his tricycle and giving them food items during CORONA QUARANTINE through his TRUST.


.

Even after CORONA subsides, he plans to do this every week.

Please try to support him in his NOBLE VISION of feeding the unfortunate in Salem.

HE SHARES HIS HAPPINESS AFTER GIVING FOOD ITEMS TO A BLIND COUPLE.

His words in Tamil
v
v
v

m.m.m.m.m.m.m.m.
21.05.2020 Thursday

இறைவனுக்கு நன்றி!

இந்தக் கொரோனா காலத்தில், பசியோடிருக்கிற சாலையோர மக்களுக்கு உணவும், ஒரு சில மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமாவது, பதினைந்து நாட்கள் பசியைத் தீர்க்க உதவ வேண்டும் என்கிற எண்ணத்தோடு அரிசி + பருப்பு + காய்கறிகள் போன்றவற்றை அவர்களின் இல்லம் தேடிச்சென்று கொடுத்தல் என்கிற இரண்டையும் தொடங்கினோம்.

ஒரு பயனாளிக்கு சுமார் 500 - 600 ரூ வரை பொருட்கள் கொண்ட பையை அன்பளிப்பாக வழங்கிய போது, இந்த சுமையை எப்படி சமாளிக்கப் போகிறோம்? என்கிற கேள்வியோடுதான் ஏப்ரல் இறுதியில் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம்.

ஆனால், இந்த இரண்டு பணிகளின் வாயிலாக ஒன்றரை மாதத்திற்குள்ளாக ரூ 25,000 என்கிற அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கும், ஆதரவற்ற மக்களுக்கும் நம்மால் முடிந்த அளவுக்கு கொடுத்திருக்கிறோம் என்பதை உணர்ந்தபோது மகிழ்ச்சியும், சந்தோஷமும் நெஞ்சை நிறைத்தது.

குறிப்பாக, அதை வாங்கிய கண்களில் தெரிந்த சந்தோஷம் வேறெதற்கும் ஈடில்லாத ஒன்று.

இந்த பார்வையற்ற தம்பதியரின் கைகளில் நம் உணவுப் பொருட்கள் சென்று சேர்ந்தபோது, அவர்களின் சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்காமல் பார்வையிலேயே சொன்னவிதம், ஒரு சின்ன புன்னகை இந்த இரண்டும் நாம் செய்ததன் நிறைவைத் தந்தது.

இந்த அறப்பணியில் துணை நின்ற அத்தனை அன்பு உள்ளங்களுக்கும், இந்தச் சூழலிலும் இயங்குவதற்கான வாய்ப்பையும், பலத்தையும் நமக்களித்த இறைவனுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏனெனில், இந்தக் காலகட்டத்தில் உடல்நிலை நன்றாக இருக்கிறவர்களே கிலோமீட்டர்கள் கணக்கில் நடந்து, நாடெங்கும் சுற்றிக் கொண்டிருப்பதும், தத்தம் பசிக்கு இறந்துபோன நாயையும் உண்ணநேரிடுகிற அவலத்தையும் கண்முன்னே பார்க்கிறோம்..

இந்த நாட்களில் அன்னமிட்டு பசி தீர்த்ததும், ஒரு மாற்றுத்திறனாளியின் இல்லத்திலேயே சென்று நிவாரணப் பொருள்  தர முடிந்த, நம் முயற்சியை மிகச் சிறப்பான ஒன்றாகவே நான் நினைக்கிறேன்.

இம்முயற்சியில் துணை நின்ற அத்தனை அன்பு உள்ளங்களுக்கும், என் பாதம் பணிந்த நன்றிகள்.

குறிப்பு -

இனிவரும் நாட்களில் ஒவ்வொரு வாரமும், சிறிய அளவில் சாலையோர மக்களின் பசி தீர்க்கும் செயல்பாட்டை தொடர்ந்து நடத்திட எண்ணியிருக்கிறோம்.
துணைநிற்க விரும்பும் நட்புகள் அழைக்கலாம்..

நன்றியுடன்,

கவிஞர் ஏகலைவன்
நம்பிக்கை வாசல் டிரஸ்ட்
சேலம் / 98429 74697
86829 94697 (G Pay)

m.m.m.m.m.m.m.m.m.m

NAMBIKKAI VAASAL TRUST - FACEBOOK 





Comments

Popular posts from this blog

soft skills by EZHILARASAN MENU 0422

MENU 0422 SOFT SKILLS BY EZHILARASAN VENKATACHALAM .. . Online English classes through Tamil . LINKS TO Soft Skills ARTICLES THAT may REDEFINE YOUR LIFE / இந்த கட்டுரைகள் உங்கள் வாழ்வில் புதிய ஒளி ஏற்றலாம் டோண்ட் மிஸ் ப்ளீஸ்  .. 01   PREGNANT DEER .. 02   WHO WILL CRY WHEN YOU DIE ? . . 03   ZEN STORY – BIG TEA CUP & SMALL TEA CUP .. . . . . 04 ZEN STORY – PATIENCE . . . . . . . . . 05   AMITAAB_BACHCHAN MEETS TATA . . 06 BODY LANGUAGE – AN INTRODUCTION .. . . . . . 07 LEARN FROM AN EAGLE – PART 1 . . 08 LEARN FROM AN EAGLE – PART 2 . PSYCHOLOGY IN TAMIL    MENU எழிலரசன் வெங்கடாசலம் சேலம் தமிழ் வழி சிறப்பு ஆங்கில பயிற்சியாளர் EZHILARASAN VENKATACHALAM Tamil Based ENGLISH TRAINER SALEM, South India. WHATSAPP TEXT ONLY = 99526 60402 New contacts WHATSAPP TEXT FIRST  . Online English class _ தமிழ் வழி ஆங்கில பயிற்சி   . . THANKS To   . . BIRDS EYE VIEW

Punctuality and Mr Leo Charles FULL Soft skills training Ezhilarasan

Punctuality and Mr  Leo Charles FULL A Flash back to 1998 .   Tamil translation    தமிழ் மொழிபெயர்ப்பு I happen to work as a computer software developer for a big civil contractor (Pre-qualified Contractor), Mr.Leo Charles.  He was the Managing Director of M/s. BrickSteel Enterprises, Salem. He was a crorepati and a very sincere Christian. A person with good manners and a kind heart. OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   I can’t forget the VIP treatment he gave me in the inauguration function of his new house. Since, I was a physically challenged person, I had difficulty in sitting down on the floor like others and eat.  However, he made me sit in a separate room and made his people serve exclusively for me like a VIP.  It was a great honour for me and could not forget the experience. Very few rich people show such extremely good manners. Meeting Mr.Leo Charles for the first time. I met Mr.Charles for the first time somewhere in 1998...

Who Will Cry When You Die? // soft skills by Ezhilarasan

Who Will Cry When You Die? book by Robin Sharma -translation " நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?  " ---  என்ற தலைப்பில் ஒரு புத்தகம்" எழுதியவர்     ராபின் ஷர்மா . * What do you mean when you die? Written in the title ... *  " நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? " என்ற இப்புத்தகத்தின்  தலைப்பின் பொருள் என்ன? . Online classes  * "When you were born, * you cried * the world smiled .. *. *“நீ பிறந்த போது, நீ* *அழுதாய்...உலகம் சிரித்தது..*. * When you die, your soul will rest in peace only if many people cry, "says Robin Sharma, *நீ இறக்கும் போது,  பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா... OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   Let's see the amazing ideas of this book . //  இந்த புத்தகத்தில் ஆசிரியர் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...* 1) Those who have money are not rich. The rich man is one who has three best friends. --  பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த ந...