Donor stood up instinctively
Rs.33 donation by Mr. Bhoopathy
Sir / friend, An interesting episode !
I am donating a small amount monthly to NAMBIKKAI VAASAL TRUST run by differently abled, AEKALAIVAN.
ஐயா / நண்பரே, ஒரு சுவையான நிகழ்ச்சி. நான் மாதா மாதம் ஒரு சிறு தொகையை நண்பர் ஏகலைவன் நடத்தும் நம்பிக்கை வாசல் டிரஸ்டிற்கு அனுப்பி வருகிறேன்.
Recently I found out that if I ask people whom I frequently meet, they too may join with me. And they may contribute at least Rs.33 every month.
நான் அடிக்கடி சந்திக்கும் மக்களிடம் நிதி உதவி கேட்டால், அவர்களும் என்னுடன் சேரலாம்
என்று சமீபத்தில் உணர்ந்தேன்.
ஒவ்வொரு மாதமும் அவர்கள் குறைந்தது ரூ.33 ஆவது பங்களிக்கலாம்.
Hence, I used to ask such people monthly before I send my donation to the trust.
எனவே, நான் நம்பிக்கை
வாசல் டிரஸ்டிற்கு என் நன்கொடையை அனுப்பும் முன் மாதாமாதம் அத்தகையை மக்களிடம் கேட்பேன்.
Yesterday, at 8 pm, I asked a gold businessman, Mr. Bhoopahy to contribute Rs.33 for AEKALAIVAN's trust through me.
நேற்று இரவு 8 மணிக்கு, நான் ஒரு தங்க வணிகர், திரு. பூபாதியை ஏகலைவனின் டிரஸ்டிற்கு ரூ.33 என் மூலம் பங்களிக்க வேண்டினேன்.
He told me to come tomorrow. Though it was a little embarrassing, I quietly came off.
அவர் நாளை வரும்படி என்னிடம் சொன்னார். அது எனக்கு ஒரு சிறிய சங்கடமாக இருந்தபோதிலும், நான் அமைதியாக திரும்பி வந்துவிட்டேன்.
Today I remembered this and [met] him about 1 pm. His office is in my walking route. He welcomed me and offered me to sit with a pleasing smile.
இன்று நான் இதை நினைவில் வைத்துக் கொண்டு 1 மணிக்கு அவரை சந்தித்தேன். அவரது அலுவலகம் நான் நடைபயிற்சி செல்லும் வழியில் தான் உள்ளது. அவர் ஒரு இனிய புன்னகையுடன்
என்னை வரவேற்று உட்காரும்படி கூறினார்.
I started, "DO YOU HAVE THE IDEA TODAY TO JOIN WITH ME IN MY CHARITABLE JOB, BY GIVING YOUR FUNDS?".
நான் மெல்லமாக ஆரம்பித்தேன், "இன்று என் தொண்டு வேலையில் நீங்களும் சேர யோசனை இருக்கிறதா, நண்பரே? --- உங்கள் நிதியை வழங்குவதன் மூலம்" என்றேன்.
He immediately gave me Rs.32 and asked whether it was okay. But suddenly, he located or fished out another one rupee coin.
அவர் உடனடியாக எனக்கு ரூ.32 கொடுத்து, "இது போதுமா?" என்று கேட்டார். ஆனால் திடீரென்று, மற்றொரு ரூபாய் நாணயத்தை எங்கிருந்தோ தேடி எடுத்து என்னிடம் கொடுத்தார்.
He stood up before he gave me Rs.33.
அவர் என் கையில் ரூ.33~ஐ கொடுப்பதற்கு முன் எழுந்து நின்றார்.
I felt very honoured by his action and promised to send it to the trust within a week or so.
நான் அவரது நடவடிக்கை மூலம் மிகவும் கௌரவப்பட்டதாக உணர்ந்தேன். ஒரு வாரத்திற்குள் அதை நம்பிக்கை வாசல் டிரஸ்டிற்கு அனுப்ப உறுதியளித்தேன்.
I congratulated him for his good manners by standing up and handing over the donation to me.
அவர் நன்கொடையை எழுந்து நின்ற பின் என்னிடம் கொடுத்தது என்னை நெகிழ்ச்சி அடைய செய்தது என்று அவரிடம் கூறி அவரை பாராட்டினேன்.
He forgot that he stood up. Hence, I again praised him that he felt that this act as a DIVINELY ACT.
அவர் தான் எழுந்து நின்றார் என்பதை அவரே மறந்துவிட்டார். எனவே, இந்த செயல் ஒரு தெய்வீக செயல் என்று அவர் உணர்ந்து விட்டார் என்று நான் மீண்டும் அவரை பாராட்டினேன்.
Hence, it was subconscious. I said he would have stood up, whether it is Rs.33 or Rs.3,300.
அது அவரது ஆழ்மனதில் இருந்து உதித்த செயல் என்பது வெளிச்சமானது. அவர் ரூ.33 நன்கொடை கொடுக்க வேண்டும் என்றாலும் நின்று இருப்பார், அல்லது ரூ3,300 கொடுக்க வேண்டும் என்றாலும் அவர் நின்றுயிருப்பார் என்றேன்.
As a true teacher, I used to share some noble thoughts with him often.
ஒரு உண்மையான ஆசிரியராக, நான் அவருடன் சில உயர்ந்த எண்ணங்களை பலமுறை பகிர்ந்துள்ளேன்.
I am surprised how a gold businessman pays, due respect to a teacher and hear me patiently.
ஒரு தங்க வியாபாரியால் ஒரு ஆசிரியருக்கு எப்படி மரியாதை செலுத்த முடிகிறது என்றும், என் பேச்சை பொறுமையாக முழுமையாக கேட்க முடிகிறது என்று நான் ஆச்சரியப்படுவேன்.
And also hear my elevated thoughts as an obedient student.
மேலும் ஒரு கீழ்ப்படிதல் மிக்க மாணவரை போல என் உயர்ந்த எண்ணங்களை நிதானமாக அவர் கேட்பார்.
Perhaps that may be the secret of his success!
ஒருவேளை அது தான் அவரது வெற்றியின் இரகசியமாக இருக்கலாம்!
Time investment by
நேரம் முதலீடு செய்தவர்
எழிலரசன் வெங்கடாசலம்
Ezhilarasan Venkatachalam
Tamil Based English Trainer
Salem
(Happened in 2018
நிகழ்வு நடந்தது 2018~இல்)
Comments