REAL LIFE ANECDOTE // உண்மை நிகழ்வு
Opening our bachelor's room lock by a colleague, using a hairpin.
எங்கள் பேச்சிலர் அறையின் பூட்டை ஒரு சக ஊழியர், ஹேர்பின் மூலம் திறந்த உண்மை நிகழ்வு.
It happen around 1989-1990, when I was a bachelor.
1989-1990 வாக்கில் நான் திருமணமாகாத இளைஞனாக இருந்தபோது இது நடந்தது.
In Hosur, one Saturday night, we all went to our mess, had our dinner and went to a movie in a TENT THEATRE nearby.
ஓசூரில், ஒரு சனிக்கிழமை இரவு, நாங்கள் அனைவரும் எங்கள் மெஸ்ஸுக்குச் சென்று, இரவு உணவு சாப்பிட்டு விட்டு, அருகிலுள்ள ஒரு டெண்ட் கொட்டகையில் ஒரு திரைப்படம் பார்க்கச் சென்றோம்.
When we returned after the second show, say about 1 a.m, one guy the asked another to open the door. He said that he didn't have the key.
செகண்ட் ஷோ முடிந்து நாங்கள் திரும்பியபோது, இரவு 1 மணி சுமார் இருக்கும். ஒருவன் இன்னொருவனை பார்த்து கதவைத் திறக்கச் சொன்னான். சாவி தன்னிடம் இல்லை என்று அவன் கூறினான்.
Then he asked the another guyto open it. He too said that he didn't have the key.
பின்னர் அவன் மற்றொரு நபரிடம் திறக்க சொன்னான். அவனும் தன்னிடம் சாவி இல்லை என்று சொன்னான்.
Finally we understand that none of us had our room key.
எங்கள் அறையின் சாவி எங்கள் யாரிடமும் இல்லை என்பதை இறுதியாக புரிந்துகொண்டோம்.
And the guy who locked the door had gone to his native place. We were stuck.
மேலும் கதவை பூட்டியவன் சொந்த ஊருக்கு சென்று விட்டான். நாங்கள் என்ன செய்வது என்று விழி பிதுங்கி இருந்தோம்.
The room lock will have 5 keys, each for one occupant.
அறை பூட்டிற்கு 5 சாவிகள் இருக்கும். ஒவ்வொரு குடியிருப்பாளருக்கு ஒரு சாவி உண்டு.
It was an -- "A-TYPE" Housing Board block [opp Hosur Bus Stand].
அது ஒரு -- [A-TYPE] "ஏ" வகை --ஹவுசிங் போர்டு குடியிருப்பு [ஓசூர் பேருந்து நிலையம் எதிரில்].
Our A-Type block had 18 houses in a cluster. And there were 6 houses in a wing.
எங்கள் A-வகைத் தொகுதியில் 18 வீடுகள் இருந்தன. மேலும் ஒரு சிறிய தொகுப்பில் 6 வீடுகள் இருந்தன.
Obviously, we can't break our room lock at 1 a.m. in the middle of the night, because all the others will wake up.
நிச்சயமாக நள்ளிரவு 1 மணிக்கு எங்கள் அறை பூட்டை எங்களால் உடைக்க முடியாது. ஏனென்றால் மற்றவர்கள் அனைவரும் விழித்துக் கொள்வார்கள்.
We all were worried about how we are going to spend the night.
நாங்கள் அனைவரும் இரவை எப்படி கழிக்கப் போகிறோம் என்று கவலைப்பட்டுக் கொண்டு இருந்தோம்.
Then casually one guy told. "Hey guys don't worry, just locate a hairpin in the floor".
அப்போது ஒருவன், "நண்பர்களே கவலைப்பட வேண்டாம், தரையில் ஒரு ஹேர்பின் இருக்கிறதா என்று பாருங்கள் என்றான்".
Luckily we were able to locate one. He started fiddling the lock with it for a few minutes.
அதிர்ஷ்டவசமாக எங்களால் ஒன்றைக் கண்டுபிடிக்க முடிந்தது. சில நிமிடங்கள் அதைக் கொண்டு பூட்டைக் குடைய ஆரம்பித்தான்.
BANG ! THE LOCK OPENED. Thank God, our problem was solved.
என் ஆச்சரியம் ! பூட்டு திறந்து கொண்டது. கடவுளுக்கு நன்றி கூறினோம். எங்கள் பிரச்சினை தீர்ந்தது.
Thereafter, I used to have special regards to the guy who opened our room's lock skillfully.
Any skill is always an asset.
களவும் கற்று மற.
-
அதன்பிறகு, எங்கள் அறையின் பூட்டை நடுஇரவில் திறமையாகத் திறந்தவனுக்கு நான் சிறப்பு மரியாதை கொடுப்பேன்.
- எழிலரசன் வெங்கடாசலம், சேலம்
Ezhilarasan Venkatachalam, Salem
Tamil Based English Trainer
Comments