.
Translation -We travel thousands of kilometres spending our time and money to get the blessings of God. It is not wrong.
இறைவனின் அருளைப் பெறுவதற்காக நேரத்தையும் பணத்தையும் செலவழித்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் நாம் பயணிக்கிறோம். இது தவறு இல்லை.
But I feel that we have totally forgotten to feed the old, aged and disabled people in our city.
ஆனால் நம் நகரத்தில் உள்ள முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கு உணவளிக்க நாம் முற்றிலும் மறந்துவிட்டதாக உணர்கிறேன்.
Futher I feel that we don't fully recognise noble souls who help such unfortunate people who live in our city.
மேலும் நம் ஊரில் வசிக்கும் அத்தகைய துரதிர்ஷ்டவசமான மக்களுக்கு உதவும் உன்னத ஆத்மாக்களையும் நாம் முழுமையாக அங்கீகரிக்கவில்லை என்று நான் எண்ணுகிறேன்.
From my point of view, these good people can be compared with great personalities like Mother Terasa or Ramalinga Vallalar.
என் பார்வையில் இந்த உன்னதமானவர்களை நாம் அன்னை தெரசா அல்லது ராமலிங்க வள்ளலார் போன்ற சிறந்த ஆளுமைகளுடன் ஒப்பிடலாம்.
One such person whom I came across in my life, around 2010, is Aekalaivan.
2010 ஆம் ஆண்டில் என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒருவர் ஏகலைவன்.
In spite of walking with a crutch, his love and affection towards humanity is immeasurable.
ஊன்றுகோலுடன் நடந்தாலும், மனித இனத்தின் மீது அவர் கொண்டிருந்த அன்பும் பாசமும் அளவிட முடியாதது.
He lost one of his leg at the age of 14, in a train accident.
14 வயதில் ரயில் விபத்தில் தனது ஒரு காலை இழந்தவர் ஏகலைவன்.
Ever since I met him, he had been a great inspiration to me.
நான் அவரைச் சந்தித்ததிலிருந்து, அவர் எனக்கு ஒரு பெரிய உத்வேகமாக இருக்கின்றார்.
Hence like the squirrel that helped Rama, I am doing my best towards his noble causes.
அதனால் ராமனுக்கு உதவிய அணிலைப் போல, அவருடைய உன்னத காரியங்களுக்கு என்னால் இயன்றதைச் செய்கிறேன்.
You should definitely watch this interview of Aekalaivan in Tamil America TV Channel and also consider to support him whenever possible. Thanks.
நீங்கள் கண்டிப்பாக ஏகலைவனின் தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி சேனலில் இருந்து எடுக்கப்பட்ட இந்த பேட்டியை பாக்க வேண்டும். மேலும் முடிந்த போதெல்லாம் அவரை ஆதரிக்கவும். நன்றி.
We should also spend money for God. And we should also spend a part of it to charity.
கடவுளுக்காகவும் பணத்தைச் செலவிட வேண்டும். மேலும் அதில் ஒரு பகுதியை தொண்டுக்கும் செலவிட வேண்டும்.
Ezhilarasan Venkatachalam
எழிலரசன் வெங்கடாசலம்
[1:18:10]
Ezhilarasan Venkatachalam
Salem
Tamil Based English Trainer
Comments