Aekalavan's interview from Tamil America TV. - April 10, 2021
.. [sorry below link not available]
[1:18:09]
..
A long interview running for more than 1 hour. (WHENEVER YOU HAVE TIME -PLEASE DON'T MISS WATCHING THIS. Thanks.)
அமெரிக்கவில் இருந்து ஒரு டீ. வி. சேனலில் இருந்து திரு.சிவம் வேலாயுதம் என்பவர் நண்பர் ஏகலைவனை ஒரு நீ.. நீண்ட பேட்டி எடுத்து உள்ளார்.
18 வயதை தாண்டிய அனைவரும் அவசியம் பார்க்க / கேட்க வேண்டிய பேட்டி. நேரம் கிடைக்கும் போது பார்க்கவும். நன்றி.
m-m-m-m-m-m-m-m
நேரம் -- குறிப்புகள்
m-m-m-m-m-m-m-m
[02:33] -- ஆரம்பம்
[04:44] -- என் உந்துதல் - செப்டம்பர் 7 என் ரயில் விபத்து -- ஆஸ்பத்திரி வார்டில் நடந்தவை
[07:30] - எல்லோரும் என்னை தன் மகனைப் போல பார்த்துக் கொண்டார்கள்
[12:30] - உங்களுக்கு தன்னிறைவு /மனத்திருப்தி கிடைத்து விட்டதா ?
[14:33] - தகுதியானவர்களை தேடித் தேடி உணவு கொடுப்போம்
[15:15] ஒரு பொட்டல உணவை கண்களில் ஒத்திக் கொண்ட ஒருவர்
[17:00] - நூறு சாப்பாடு பொட்டலம் கொடுக்கும் போது- நூறு விதமான அனுபவம் எனக்கு கிடைக்கும்
[17:45] சக மனிதனுடைய பசியை தீர்க்க முடியாத ஒரு எழுத்தாளருடைய எழுத்து "வேஸ்ட்"
[19:15] - நம்பிக்கை வாசல் டிரஸ்ட் பற்றி
[23:23] - செய்தியை பரப்ப வேண்டிய தேவை உள்ளது
[24:24] -ஃபிரி பிசியோ தெரபி செண்டர் பற்றி
[25:01] - ஒரு லட்சம் அன்பளிப்பு கொடுத்த ஒருவர்
[25:55] இந்த இன்டர்வியூவிற்கு நான் ஏன் லேட் தெரியுமா, உங்களுக்கு ? 50 கிலோ அரிசி வாங்க 45 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தேன், என் மகனுடன்
[36:00] என்னை ஒரு காப்பகத்தில் சேர்த்து விடு தம்பி - என்று கேட்பவர் பலர்
[37:37] பசி இல்லாத சேலம் பற்றி
[39:01] பசி இல்லாத சேலம் பற்றி மேலும் ..
part 2 =-=-=-=-=-=-=-=-=-=-=-
[ 39:20 ] - சும்மா சோறு போடுவது சரியா ? -- என்று கேட்கிறீர்கள்
[ 40:28 ] - எங்கள் [வருங்கால] முதியோர் இல்லத்தில் எல்லோருக்கும் ஏதாவது வேலை கொடுப்போம்
[42:42] ஒரு கேள்வி --சிவம் வேலாயுதம் ஒரு தனி மனிதனால் ....
[ 43:08 ] - மன்னிக்கவும் .. என் பின்னால் 100 மனிதர்கள் துணை நிற்கிறார்கள் -- நான் மட்டும் முதலில் நிற்கிறேன்... அவ்வளவே
[ 43:43 ] - சிவம் : "சாலை ஓர மனிதர்களின் சக்தியை ஒன்று இணைக்க முயற்சி செய்யலாமே?" -- என்றேன்.
[ 44:35 ] - உங்கள் இலக்கிய பங்களிப்பு வடிவங்கள் என்ன என்ன ? கவிதை கட்டுரை ..
[ 44:55] - ஜூன் 27 -ஹெலன் கெல்லரின் பிறந்த நாளில் என் முதல் கவிதை புத்தகத்தை வெளியிட்டேன்
[ 46:26 ] - இரண்டாவது வெளியீடு ... "சாதனை படைக்கும் ஊனமுற்றவர்கள்" -பாகம் - 1, 2, 3, 4
[ 47:10 ] - புதிய தலைமுறை பத்திரிகை என்னைப் பற்றி எழுதியது
[ 48:00 ] - பரிதாபப் பார்வை மாற வேண்டும் (உடல் ஊனமுற்றவர்கள் அல்லது மாற்றுத் திறனாளிகள் மேல்)
[ 48:48 ] - டிசம்பர் 2009 வெளியீடு -- "மாற்றுத் திறன் சாதனைச் சிகரங்கள்" -- புத்தகம் வெளியீடு. அதில் "மாற்றுத் திறனாளி" என்ற வார்த்தையை முதன் முதலில் நான் ஆவனப்படுத்தினேன்.
[ 48:55 ] - பிறகு தான் அரசு "மாற்றுத் திறனாளி" என்ற வார்த்தையை அமுல்படுத்த G.O. வெளியிட்டது.
[ 50:05 ] - ஒரு எழுத்தாளரால் சமூகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்று, அன்று நான் உணர்ந்தேன்.
[ 50:28 ] - இது வரை 19 புத்தகங்களை வெளியிட்டு உள்ளேன். 2018 இல் - "நல்ல நேரம் நமக்காக" - பிறகு "கவிச்சிதறல்" -இது பரிசு பெற்றது
[ 51:14 ] - ஒரு சிறு பத்திரிகை நடத்தினேன் -- "நம்பிக்கை வாசல்" என்று
[ 52:55 ] - மறக்க முடியாத விஷயங்கள் பற்றி
[ 53:30 ] - சிவம் : "இளம் சமுதாயத்திற்கு என்ன முயற்சிகள் எடுக்கலாம் ?"
[ 54:00 ] - ஃபிரீ டியுஷன் சென்டர் பற்றி
[ 54:54 ] - 2 பிஸ்கெட் மாணவர்களுக்கு படிப்பின் மேல் ஓர் பெரிய ஆர்வத்தை உருவாக்கியது
[ 55:35 ] - ஸ்கூல் எச்.எம். எங்கள் மாணவர்களை பாராட்டினார்.
[ 56:05 ] - பாத்திரம் கழுவும் பெண் தங்கள் மகன் எங்களிடம் படிக்க விரும்பியது
[ 56:25 ] - நீங்கள் ஒழுக்கமும் சொல்லிக் கொடுக்கிரீர்கள்
[ 56:56 ] - எல்லோரும் உங்கள் வீட்டிற்கு அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரு சிறிய டியூசன் சென்ட் நடத்தலாமே?
[ 57:57 ] - இளம் தலைமுறையிற்கு நாம் வழிகாட்ட வேண்டும்
[ 59:11] - சிவம் : மறக்க முடியாத விஷயங்கள் பற்றி கூறவும்
[ 59:50 ] - சேலம் மாவட்டத்தில் மட்டும் 60,000 உடல் ஊனமுற்ற அல்லது மாற்று தன் திறனாளிகள் உள்ளனர்
[ 01:02:10 ] - நான் 6 மாத குழந்தையாக இருந்த போது நான் பிழைக்க மாட்டேன் என்று ஒரு டாக்டர் கூறினார். ரூ. 1 லட்சம் செலவு செய்து என்னை என் தாய் காப்பாற்றினார்
[ 01:02:10 ] - ஒரு பெண்ணால் தான் ஒரு உயிரை காப்பாற்ற முடியும்
[ 01:06:35 ] - சிவம் : முடிவாக எண் சொல்ல விரும்புகிறீர்கள்?
[ 01:08:08 ] --"கெட்டவனிடத்திலும் ஒரு நல்லவன் ஒளிந்து இருக்கிறான். அதேபோல் நல்லவனிடத்திலும் ஒரு கெட்டவன் ஒளிந்து இருக்கிறான்".
[ 01:10:00 ] - 15 வருடம் "ஒத்தைக்கால்" டைலராக இருந்தேன்
[ 01:10:55 ] - N. S. சாகுல் ஹமீது ஐயா என்னை படிக்க வைத்தார் (எத்தனை முறை அரியர்ஸ் எழுதினாலும் பரவாயில்லை என்றார்)
[ 01:11:30 ] - இப்போது நான் சுமார் 40 அரசு பள்ளி மாணவர்களை உருவாக்கி வருகிறேன்
[ 01:12:25 ] - சிவம் வேலாயுதம் : முடிவாக எல்லாவற்றையும் தொகுத்து பேசுகிறார் ..
[மூன்று முறை மரணத்தை வென்ற ஏகலைவனைப் பற்றி ...]
Ezhilarasan Venkatachalam Salem
Tamil Based English Trainer
Comments