Skip to main content

SURYA LAMENTS in Tamil ABOUT HATRED SPREADING IN SOCIAL MEDIA Venkatachalam salem

SURYA LAMENTS in Tamil ABOUT HATRED SPREADING IN SOCIAL MEDIA Venkatachalam Salem 


SURYA LAMENTS in Tamil 
HOW CAN PEOPLE BEHAVE LIKE THIS IN PUBLIC?
.
வெறுப்பு... சமூக ஊடகத்திடமிருந்து வெளிப்படுகிறதா, நம்முடைய மன வக்கிரத்திலிருந்து வெளிப்படுகிறதா?

சூர்யா

புயலுக்கு கஜான்னு ஆம்பளைப் பேரு வெச்சா இப்படித்தான். குடிகாரன் மாதிரி இங்கே வர்றேன்னு சொல்லிட்டு வேற எங்கேயோ போறது. இதே சுஜான்னு பொம்பளப் பேரு வெச்சிருந்தா ஸ்ட்ரெயிட்டா இந்நேரம் எல்லாருக்கும் சங்கு ஊதி சோலியை முடிச்சிருக்கும்.

 - இப்படி ஒரு வாட்ஸ்அப் பதிவு பலரிடமிருந்து நமக்கு வந்திருக்கும். நாமும் பலருக்கும் அதைப் பகிர்ந்து மகிழ்ச்சி அடைந்திருப்போம்.

இந்தப் பதிவை ‘ஸ்மைலி’ போட்டு நகைச்சுவையாகப் பெரும்பாலானவர்கள் பகிர்ந்துகொண்டிருந்தபோது,.....

....  தமிழகத்தின் ஏழு மாவட்ட மக்களின் வாழ்க்கை, கஜா புயலால் சூறையாடப்பட்டிருந்தது. லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கை கடும் பாதிப்புக்குள்ளாகியிருந்தது. தென்னை மரங்கள் புயல் காற்றால் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு, வாழ்வாதாரமே அழிந்துபோயிருந்தது. கொத்துக்கொத்தாக வீழ்த்தப்பட்ட வாழை மரங்கள், மழையிலும் காற்றிலும் நிலைகுலைந்துபோன பயிர்கள் என இழப்புகளை நினைத்து மக்கள் துடித்துக்கொண்டிருந்தனர்.

ஒரு வானிலை அறிவிப்பு வந்தால்,
உடனே மாணவர்கள் விடுமுறை கேட்பதுபோல
வருகிற சாதாரண
மீம்களில் கூட
நகைச்சுவை அல்ல;

கூடவே நம்முடைய அலட்சியத்தையும் அறிவீனத்தையும் சேர்த்தே பகிர்கிறோம்.

 ஒரு புயல் என்பது நாடு எதிர்கொள்ளும் பேரிடர். வாழ்வாதாரத்தை அழித்து, மக்களைத் துன்பத்தில் தத்தளிக்கவிடுகிற இயற்கைச் சீற்றத்தை..... ‘விடுமுறை தின’மாக நம் குழந்தைகளுக்குக் கடத்துவது ஆபத்தானது.

மது அடிமைகளுக்குக் குடிக்காமல் இருந்தால் எப்படி
கை கால்கள்
நடுங்குமோ,
 அதுபோலத் தங்களுடைய
அபத்த நகைச்சுவைக்கு
லைக், ஷேர், கமென்ட்
அதிகமாகக் கிடைப்பதற்காக,
எவ்வளவு வேண்டுமானாலும்
கீழிறங்கத் தயாராக இருக்கிறோம்.


நகைச்சுவை என்பது மற்றவர்களைக் காயப்படுத்துவது என்று யார் இந்தத் தலைமுறைக்குச் சொன்னது?

***
சென்னையில் கடந்த ஆண்டு ஒரு பிரபல ஜவுளிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டு, சில நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது நினைவிருக்கலாம். அப்போது தீப்பற்றி எரிகிற கடையின் புகைப்படத்தைப் போட்டு,
....
... ‘மனைவிகூட புடவை எடுக்க வந்து மணிக்கணக்கில் காத்திருந்த கணவர்களின் வயிற்றெரிச்சல்தான் இந்தத் தீ விபத்து

.......என்ற பதிவை ஸ்மைலி போட்டு சமூக ஊடகங்களில் பல ஆயிரம் பேர் பகிர்ந்திருந்ததை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.

மிகப் பெரிய இழப்புகளைக்கூட குரூர நகைச்சுவை ஆக்குவதும், அதை மற்றவர்கள் பகிர்வதும், கவலைகொள்ள வேண்டிய செயல் மட்டுமல்ல, கண்டிக்க வேண்டிய செயலும்கூட.

ஊரே தீப்பற்றி எரியும்போது பிடில் வாசிப்பது என்பது இதுதான். ஆரோக்கியத்தின் அடையாளமாக விளங்கும் நகைச்சுவை உணர்வு, இணையத்தில் ஒரு தொற்றுநோயைப் போலப் பலரின் தனிப்பட்ட வாழ்வைப் பலி கேட்கிறது. 

பொறுப்புணர்வற்ற பதிவுகளைப் பரப்புவதை நிறுத்தினால், அவை உருவாவது தானாகவே குறையும்.
***   ***

சமூக ஊடகங்கள் ஒருவகையில் நம்மிடம் கும்பல் மனோபாவத்தை வளர்த்தெடுக்கின்றன. எங்கிருந்தும் எவர் மீதும் பாயக் காத்திருக்கும் குரூர மனோநிலைக்கு என்னுடைய தந்தையும் சமீபத்தில் இலக்கானார்.

ஒரு விழாவில் பங்கேற்கச் சென்றவரிடம் குறுக்கிட்டு, ‘தன்படம்’ எடுக்க முற்பட்டார் ஓர் இளைஞர். என் தந்தையார் அந்த இளைஞரின் செல்பேசியைத் தட்டிவிட்டார். அந்த சம்பவத்துக்கு இணைய உலகம் ஆற்றிய எதிர்வினை, அவருடைய 75 ஆண்டு கால வாழ்வையே கேலிசெய்தது.

.......‘அந்த இளைஞரிடம் அவர் கனிவாக நடந்து கொண்டிருக்கலாம்’ என்பதே என் கருத்தும். அந்த நிகழ்வுக்குப் பின்னர் என் தந்தையின் கருத்தும் அதேதான்.

...... ஆனால், அந்த ஒரு நாளுக்குள் மட்டும் அவர் மீது எவ்வளவு தாக்குதல்கள்?

 ‘விமர்சனம்’ என்ற
பெயரில் காழ்ப்புணர்வைக்
கொட்டுவதும்,
வயதுக்கும்
அனுபவத்துக்கும்
எவ்விதமான
மதிப்பையும்
வழங்காமலிருப்பதுதான்
எதிர்வினையா?


பிரபலமானவர் என்பதால் அனுமதியின்றி புகைப்படம் எடுக்கலாம் என்று நினைப்பது, தனிப்பட்ட உரிமையை மீறுகிற செயல். இறப்பு நிகழ்வுக்கு அஞ்சலி செலுத்தப் போகுமிடத்திலும், சிலர் ‘தன்படம்’ எடுக்க கட்டாயப்படுத்தும்போது அந்தச் சூழலை எப்படி எதிர்கொள்வது என்று தடுமாறுவது எனக்கே தனிப்பட்ட அனுபவம்.

விமான நிலையத்தில்
கழிப்பறையை
உபயோகித்துவிட்டுத்
திரும்பினால்,
அங்கும் கேமராவோடு
நிற்கிறார்கள்.


***   *** 
பொதுவெளியில் பொறுமையைத் தவறவிட்ட ஒரு கணத்துக்காக, ஒரு மனிதரின் ஒட்டுமொத்த வாழ்வையும் துச்சமாகத் தூக்கி எறிந்து ஆபாசமாகத் தாக்க முடியும் என்றால், நாமெல்லாம் யார்?

நகைச்சுவை என்கிற பெயரில் உருவான மீம்களும், விமர்சனம் என்கிற பெயரில் வெளிப்பட்ட வார்த்தைகளைப் படித்தபோது, இவ்வளவு ‘வெறுப்புணர்வு’ கொண்ட சமூகத்திலா வாழ்கிறோம் என்று கவலையாக இருந்தது.

***  ***
- சூர்யா,
திரைப்பட நடிகர்.

தொடர்புக்கு: suriya@agaram.in

நன்றி : தி இந்து :  20 Nov 2018 

=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=
MY FOREWORD

Dear friend / Sir,

FIRST TIME I AM UNABLE  TO ABRIDGE AN ARTICLE MORE THAN 33%.

I ACCEPT MY DEFEAT.

LIKE THE DIALOGUE IN SURYA'S MOVIE ....singam (LION)...

... THE SENTENCES IN THIS LETTER ARE LIKE FIRE (OR A MISSILE).

... SIMPLY I CAN'T CUT IT SHORT.  (I AM SURE IT CAME FROM BROTHER SURYA'S HEART AND NO DIALOGUE WRITER HELPED HIM).

LIKE SURYA, I WANT TO BE A RESPONSIBLE CITIZEN IN SPITE OF GREAT ODDS IN MY PERSONAL LIFE.

I WANT TO GIVE OUR CHILDREN A BETTER WORLD (BOTH HARDWARE AND SOFTWARE).

BUT IT IS UNFORTUNATE TO COME TO KNOW THAT THE UNIVERSAL SOFTWARE  ...the social media ....IS IRRESPONSIBLE IN ITS BEHAVIOR.

AND MANY UNKNOWINGLY SPREAD MEMES WITHOUT VISUALIZING THE PAINS OF THE TARGETED PERSON WHO MAY READ IT.

SURYA LAMENTS HOW CAN PEOPLE ...

1) MAKE THE CHILDREN FEEL HAPPY ... BECAUSE  THE SCHOOLS OR COLLEGES HAD BEEN DECLARED AS HOLIDAY DUE TO .. STORM OR HEAVE RAINFALL. (IT SHOULD BE A SAD OR SOLEMN DAY).?

2) WHEN A TEXTILE SHOP IN CHENNAI IS ON FIRE ... HOW CAN PEOPLE CREATE MEMES MAKING FUN OF IT?

3) AND THOUGH AFTER THE INCIDENT HIS FATHER, ACTOR SIVAKUMAR AND HE HIMSELF REGRETTED THE INCIDENT (FOR HITTING THE MOBILE OF A PERSON APPROACHING FOR A SELFIE...).  BUT IS IT FAIR THAT OVER NIGHT, WITH MEMES PERSONS CAN TARNISH THE IMAGIE OF HIS DAD BUILT OVER DECADES OF HARD WORK?

4) BE READY WITH A MOBILE  (... EDUCATED, UNEDUCATED, YOUNG, OLD) TRYING TO CAPTURE ME COME OUT OF A TOILET IN A FLIGHT?

NO DOUBT WE HAVE MANY LATEST TECHNOLOGIES NOW AT OUR FINGER TIPS.

BUT ARE WE CIVILIZED  ?

HE QUESTIONS..


And I am also seconding his words
(with unhappiness and frustration).

Part 
Translation 
by

Ezhilarasan Venkatachalam
Global Tamil Based English Trainer
Salem, South India.

THIS IS ONLY FOR EDUCATIONAL PURPOSES


.
Copy of 66% text from Tamil newspaper below / above 

=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=
Thanks to the source :





Comments

Orgstead said…
Finding recruitment and leadership management consulting firms in India? then this is the right place for you. Orgstead is one of the best consulting firms which offer you various type of consulting services like education consulting, management consulting and much more.

Popular posts from this blog

Venkatachalams soft skills clips 25 to 50

Friends, I would like to share a big collection of 25 links for video that I enjoyed with you all [from 25 to 50 in reverse order ].   PLEASE SELECT EACH LINK GIVEN BELOW AND  VIEW THE VIDEOs [50] Rajnikant talks about miracles ... [English] https://youtube.com/shorts/EGaHfZgBZUQ?feature=share   --- (Part 1  ... 1 to 25)   [-][-]  -- P art 3 - links 51 to 100   [-][-] -   PART 4 - CLIPS 101 TO 150 - [48] What  Abraham Lincoln said about cutting a tree? - Madhavan quotes  [revised] https://youtube.com/clip/UgkxOj07LhPKcEqEaz9ORbzAFljjKCBGrr2i   [47] Sudha Murthy - childcare - mobile addition  [English] https://m.youtube.com/watch?v=86UDb51DvuI  [6:04] [46] Secret of a happy married life - Sudha Murthy   https://youtube.com/shorts/rcB4k92NXn8?feature=share [45] The richest people did not follow the regular route of college, job etc ... https://youtube.com/shorts/rjQOH-x2W9w?feature=share   ...

VENKATACHALAMs soft skills CLIPS 1 TO 25

VENKATACHALAMs soft skills CLIPS 1 TO 25  Ezhilarasan Venkatachalam's  LIKED CLIPS COLLECTION - numbered in descending order.  Friends, I have spent lot of time to view many videos and selected the following useful matter from them. Please open the link and watch carefully. //  நண்பர்களே,  நான் பல மணிநேரம் செலவிட்டு பல  வீடியோக்களைப் பார்த்து, பிறகு அவற்றிலிருந்து பயனுள்ள பின்வருவனவற்றைத் தேர்ந்தெடுத்து உள்ளேன். இணைப்பைத் திறந்து கவனமாகப் பார்க்கவும். [25] RIVERS DON'T DRINK THEIR OWN WATER  https://youtube.com/shorts/UX5nZ7ORC-g?feature=share   [2 4] "I CUT MY HAIR TO PLAY TENNIS". Kiran Bedi, IPS, is of course a great personality.  https://youtube.com/shorts/gEfejarZDzI?feature=share - [=]   (Part 2 ..  26 to 50)   [=][=]  Part 3 -- clips 51 to 100   [=][=]  Part 4 - CLIPS 101 TO 150 - 23 -- NA 22 -- NA  [21] Mr Sundar Pichai's early morning routine, in his own words (HIGH ENGLISH) ...

Venkatachalams soft skills clips 101 to 150

Venkatachalams soft skills clips 101 to 150 . (142) Actor Madhavan's speech about his problems in releasing a movie on boxing and his advice from his friend who sold two companies before becoming rich (HIGH ENGLISH) https://m.youtube.com/watch?v=YrBcTAzrRNY      -  (Part 1  ... 1 to 25)   [-][-]  Part 2 ..  26 to 50)   [-][-]  Part 3 -- links 51 to 100    - (141)  -- 17 times my friend tried to meet a famous REAL ESTATE BUSINESSMAN. Finally he jumped into the LIFT ELEVATOR and then got an appointment. (HIGH ENGLISH) https://youtube.com/clip/Ugkxh3m0l5RXul4WWPZKj6dRcgVycBhYaiF_       101 to 142 Soft Skills videos [presently only]  (140) -- Santhamma, teaching at ripe old age. This 94-year-old professor's unwavering passion for teaching is inspiring. She is a great inspiration for all.  https://m.youtube.com/watch?v=v_78hth7MZU   139 -- Buddha Quotes  [Indian English ] https:...