ஓர் இளைஞரின் விஸ்வரூபம்! என்னதான் இணையதள வர்த்தகம் பிரம்மாண்டமாக வளர்ச்சி பெற்றிருந்தாலும், சூடாக ஒரு டீ குடிக்க நினைக்கும்போது அதைக் கொண்டுவந்து தர எந்த நிறுவனமாவது உள்ளதா என்ற ஏக்கம் சில நேரம் தோன்றும். இந்த ஏக்கத்தை உணர்ந்தோ என்னவோ, ஜெய்ப்பூரைச் சேர்ந்த ரகுவீர் சிங் சவுத்ரி என்ற இளைஞர், வாட்ஸ்அப் மூலம் ஆர்டர் செய்தால், அதிகபட்சம் 15 நிமிடங்களில் வீட்டு வாசலுக்கே ஆவி பறக்கும் தேநீரைக் கொண்டுவந்து சப்ளை செய்கிறார். டெலிவரி பையன் வீடுகளுக்கும் கடைகளுக்கும் டீ விநியோகிக்கும் தொழிலை ரகுவீர் சிங் தொடங்கியதன் பின்னணி சுவாரசியமானது. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ரகுவீர், பள்ளிப் படிப்பைக்கூட முழுமையாக முடிக்கவில்லை. பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, மாலை வேளையில் வேலைக்குச் சென்றால் வருமானம் கிடைக்கும் என்பதற்காக அமேசான் நிறுவனத்தில் டெலிவரி பிரிவில் வேலைக்குச் சேர்ந்தார். மாதம் ரூ.9,000 அவருக்குச் சம்பளமாகக் கிடைத்தது. பொதுவாக டெலிவரி பிரிவில் இருப்பவர்கள், நகரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, பொருட்களை வாடிக்கையாளர்களிடம் சேர்க்க வேண்டும் என்பதால் இரு சக்கர வாகனங்களில்தான் செல்வ...
Soft Skills and Personality Development articles in Tamil and English // பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் கட்டுரைகள், சுய முன்னேற்ற கட்டுரைகள்