Recently I came across an amazing talk of wheelchair heroine of Pakistan, Ms. Muniba Mazari.
சமீபத்தில் பாகிஸ்தானின் சக்கர நாற்காலியுடன் வாழும் நாயகி திருமதி முனிபா மசாரியின் ஒரு அற்புதமான பேச்சைக் கேட்டேன் / கண்டேன்.
[6:38]
The younger generation need to know about her.
இளைய தலைமுறையினர் இவரைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
After a car accident she was confined to a wheelchair. But her mind refused to be confined.
ஒரு கார் விபத்துக்குப் பிறகு அவர் வாழ்க்கை சக்கர நாற்காலியில் முடங்கியது. ஆனால் அவளது மனம் கட்டுப்பட மறுத்தது.
She won over her physical limitations and became a hero or more precisely a heroine.
அவர் தனது உடல் வரம்புகளை வென்றார். பிறகு ஒரு ஹீரோ ஆனார் அல்லது இன்னும் துல்லியமாக கூற வேண்டுமானால் ஒரு கதாநாயகி ஆனார்.
Although wheel chair bound, her spirit and artistry knows no bounds.
சக்கர நாற்காலியில் முடக்கப்பட்டாலும், அவருடைய உற்சாகத்திற்கும் கலைத்திறனுக்கும் எல்லையே இல்லை.
Besides being an artist she is also a motivational speaker and an activist.
ஒரு கலைஞராக மற்றும் ஒரு ஊக்கமளிக்கும் பேச்சாளராக மற்றும் செயல்பாட்டாளராக உள்ளார்.
She is Pakistan’s first Goodwill Ambassador to "UN. Women" Pakistan.
அவர் யூ என். உமன் ("UN. Women") பாகிஸ்தானுக்கான பாகிஸ்தானின் முதல் நல்லெண்ணத் தூதர் ஆவார்.
She is one of the Forbes 30 under 30 for 2016 in Media and Marketing Category.
மீடியா மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் 2016 ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் 30 வயதுக்குட்பட்ட 30 பேரில் இவரும் ஒருவர்.
Through her work and life story, Ms Mazari aspires to inspire those who lose hope.
தனது வேலை மற்றும் வாழ்க்கைக் கதையின் மூலம், நம்பிக்கையை இழந்தவர்களை ஊக்குவிக்க விரும்புகிறார் திருமதி முனிபா மசாரி.
English source : Wikipedia
தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் சுருக்கம்
எழிலரசன் வெங்கடாசலம்
சேலம்
Ezhilarasan Venkatachalam
Salem
Onlinea Tamil Based English Trainer
Comments