பெண்ணின் நிராகரிப்பை ஆண் ஏற்றுக்கொள்ள வேண்டும் சிவபாலன் இளங்கோவன் மன நல மருத்துவர். சில நாட்களுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி ஒருவரை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் இருவரும் சில காலங்கள் பழகியதாகவும், அதற்குப் பிறகு அந்தப் பெண் அவரிடம் பேசுவதைத் தவிர்த்ததாகவும், அதனால் கோபமடைந்த இளைஞன் இப்படிப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் செய்திகளில் தெரியவந்தது. சமீப காலங்களில் நாம் தொடர்ச்சியாக இது போன்ற செய்திகளைக் கவனித்துவருகிறோம். ஒரு பெண் தன்னை நிராகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல், அந்தப் பெண்ணைக் கொலை செய்யும் அளவுக்குத் துணிவது பல கேள்விகளை எழுப்புகிறது. ஒரு பெண் தனக்குக் கட்டுப்பட வேண்டும், அவளுக்கென்று தனிப்பட்ட விருப்பங்கள் ஏதும் இருக்கக் கூடாது, தன்னைப் பற்றியே சிந்திக்க வேண்டும், தன்னைத் தாண்டி அவளுக்கு வேறு எதுவும் முக்கியமானதாக இருக்கக் கூடாது என்ற மூர்க்கத்தனமான பழமைவாத ஆண்மையச் சிந்தனையின் நீட்சியே ஒருவனை இப்படிப்பட்ட மனநிலையை நோக்கித் தள்ளுகிறது. ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவளைப் பின்தொடர்வதோ ...
Soft Skills and Personality Development articles in Tamil and English // பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் கட்டுரைகள், சுய முன்னேற்ற கட்டுரைகள்