What is Luxury?
சொகுசு என்றால் என்ன?
Luxury is not getting treatment from the most expensive hospital.
Luxury is being healthy.
மிகவும் விலையுயர்ந்த மருத்துவமனையில் இருந்து உயர்தர சிகிச்சை பெறுவது சொகுசு அல்ல.
ஆரோக்கியமாக இருப்பது தான் "சொகுசு."
.
Luxury is not going on a cruise or luxury ship and eating food prepared by a renowned chef.
Luxury is eating fresh organic food grown in your own backyard.
ஒரு ஆடம்பர கப்பலில் செல்வதும் ஒரு புகழ்பெற்ற சமையல்காரரால் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிடுவதும் சொகுசு அல்ல.
உங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தி வளர்க்கப்படும் காய்கறிகளை சமைத்து சாப்பிடுவது தான் "சொகுசு."
Luxury is not having an elevator in your house.
Luxury is the ability to climb 3 or 4 floors of staircases without difficulty.
உங்கள் வீட்டில் ஒரு "லிஃப்ட்" - மின்தூக்கி - இருப்பது சொகுசு அல்ல.
3 அல்லது 4 மாடி படிக்கட்டுகளில் சிரமமின்றி ஏறும் திறன் உங்களுக்கு இருப்பது தான் "சொகுசு."
Luxury is not the ability to afford a huge refrigerator.
Luxury is the ability to eat freshly cooked food 2 or 3 times a day.
ஆடம்பரமான ஒரு பெரிய குளிர்சாதன பெட்டியை -- பிரிட்ஜ் -
வைத்து இருப்பது சொகுசு அல்ல.
ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை புதிதாக சமைத்த உணவை உண்ணும் திறன் இருப்பது தான் "சொகுசு."
Luxury is not having a home theatre system and watching the Himalayan mountain expedition.
Luxury is physically experiencing the Himalayan mountain expedition.
ஆடம்பரமான ஒரு ஹோம் தியேட்டர் டீ.வியில் இமயமலை மலை பயணத்தை பார்த்து ரசிப்பது அல்ல சொகுசு.
ஒரு இமயமலை மலைப் பயணத்திற்கு நேரில் சென்று அதை அனுபவிப்பது தான் "சொகுசு."
In the 1960's a Car was a luxury.
1960 களில் ஒரு கார் ஆடம்பரமாக இருந்தது.
In the 1970's a Television was a luxury.
1970 களில் ஒரு தொலைக்காட்சி பெட்டி ஆடம்பரமாக இருந்தது.
In the 1980's a Telephone was a luxury.
1980 களில் தொலைபேசி ஆடம்பரமாக இருந்தது.
In the 1990's a Computer was a luxury.
1990 களில் கணினி ஆடம்பரமாக இருந்தது.
In the 2000's a cell phone was a luxury.
2000 ஆம் ஆண்டில் ஒரு மொபைல் போன் ஆடம்பரமாக இருந்தது.
In the 2010's a smart phone was a luxury.
2010 ஆம் ஆண்டில் ஒரு ஸ்மார்ட் போன் ஆடம்பரமாக இருந்தது.
So what is a Luxury now??
இப்போது "சொகுசு" என்றால் என்ன?
Being healthy, being happy, being in a happy marriage, having a loving family, being with loving friends , living in an unpolluted place
-- all these are the real LUXURY, now.
ஆரோக்கியமாக இருப்பது,
மகிழ்ச்சியாக இருப்பது,
மகிழ்ச்சியான திருமண பந்தத்தில் இருப்பது,
அன்பான குடும்பம்,
அன்பான நண்பர்களுடன் இருப்பது,
மாசு இல்லாத இடத்தில் வாழ்வது
--- இவை அனைத்தும் தான் இப்போது "உண்மையான" ஆடம்பரங்கள்.
All these things have become rare.
இவை அனைத்தும் அரிதாகிவிட்டன.
And these are the real "LUXURY ".
இவை தான் உண்மையான "ஆடம்பரம்".
I hope all of us would experience LUXURY.
நாம் அனைவரும் ஆடம்பரத்தை அனுபவிப்போம் என்று நம்புவோம்.
Thanks to
Shabbir for English content.
தமிழ் மொழிபெயர்ப்பு
செய்தது
எழிலரசன் வெங்கடாசலம் சேலம்
Comments