Translation : You are emotionally, physically, financially the average of five // soft skills Ezhilarasan
Translation : you are emotionally, physically, financially.. the average of the five people you spend the most time with.
.INTERESTING QUOTE : ...
".. you are emotionally, physically, financially.. the average of the five people you spend the most time with."
சுவையான மேற்கோள் ...
நீங்கள் உணர்ச்சி ரீதியாக, உடல்ரீதியாக, நிதி ரீதியாக மேலும் மற்றவைகளில்.. எப்படி இருப்பீர்கள் என்றால், நாள்தோறும் உங்கள் நேரத்தை அதிகம் எந்தெந்த ஐந்து நபர்களிடம் பங்கிட்டுக் கொள்கிறீர்களோ அந்த ஐந்து நபர்களின் சராசரி பண்புகள் கொண்டவனாக தான் திகழ்வீர்.
Excerpts from article titled :
..........................................................................
10 Things The Most Successful People Do Every Day By Eric Barker (Point No.8)
எரிக் பர்க்கர் எழுதிய ஒரு பெரிய மனோத்துவ கட்டுரையில் இருந்து பகுதி 8.
.................................................. ......
கட்டுரை தலைப்பு :
அதிசிறந்த வெற்றியாளர்கள் ஒவ்வொரு நாளும் செய்கின்ற 10_விஷயங்கள்
## எரிக் பர்க்கர். (தலைப்பு எண் 8)
Remember The 5 Chimps Theory
5 சிம்பான்ஜிகளின் கோட்பாட்டை நினைவு கூறுங்கள்
Naval Ravikant is the CEO and co-founder of AngelList.
He has been an early investor in a number of startups you just might have heard of — like Twitter and Uber..
நேவல் ரவிகான்த் "ஏஞ்சல் லிஸ்ட்" என்ற கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மற்றும் இணை நிறுவனர் ஆவார்.
இவர் "ட்விட்டர்" மற்றும் "யுபர்" போன்ற - பல புதிய கம்பெனிகளில்
தொடக்கத்திலேயே ஒரு முதலீட்டாளராக இருந்தார் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
But he’s not just another Silicon Valley tycoon heavy on the smarts — this guy is wise.
ஆனால் இவர் மற்ற சிலிக்கான் பள்ளத்தாக்கு அதிபர்கள் போல அல்ல - இவர் விவேகமுள்ளவர்.
He knows that we’re not as independent as we might like to think
நாம் எண்ணிக் கொண்டு இருப்பது போல நாம் ஒவ்வொருவரும் உண்மையில் தனித்தன்மையுள்ள நபர்கள் அல்ல என்கிறார் இவர்.
Those around us influence us, whether we realize it or not.
நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நாம் உணர்கிறோமோ இல்லையோ, நம்மை அவர்கள் பாதிக்கிறார்கள்.
And if you’re not taking action based on that truth, you’ll never be as successful or as happy as you would like.
நீங்கள் அந்த உண்மையை அடிப்படையாக கொண்டு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீங்கள் விரும்பியபடி வெற்றிகரமான மனிதனாக அல்லது மகிழ்ச்சியான மனிதனாக உங்களால் இருக்க முடியாது.
Naval explains in "Tools of Titans":
நேவல் ரவிகான்த் "ஜாம்பாவான்களின் கருவிகள்" என்ற புத்தத்தில் இப்படி விளக்குகிறார் .
There is a theory that I call "the five chimps theory".
ஒரு கோட்பாடு இருக்கிறது அதை
நான் "ஐந்து சிம்பான்சிகளின் கோட்பாடு" என்று கூறுவேன்.
In zoology, you can predict the mood and behavior patterns of any chimp by which five chimps they hang out with the most.
விலங்கியலில் நீங்கள் எந்த ஒரு சிம்பான்சியின் மனநிலையையும் மற்றும் நடத்தையையும் சுலபமாக கணிக்க முடியும்.
அது என்வென்றால் தினமும் அதிக நேரம் தன் நேரத்தை அது பங்கு போட்டுக் கொள்ளும் வேறு ஐந்து சிம்பான்சிகளின் சராசரி நடத்தை தான்.
Choose your five chimps carefully.
ஆகையால் கவனமாக உங்கள் ஐந்து "சிம்பான்சிகளை" தேர்வு செய்யுங்கள் !
Others in the book echoed similar sentiments. Tim sums it up:
புத்தகத்தில் எழுதியுள்ள மற்றவர்களும் இதே போன்ற உணர்வுகளையே எதிரொலிக்கின்றனர்.
"டிம்" அதை சுறுக்கமாக இப்படி கூறுகிறார் :
The belief, if I were to generalize it, is that ...
....you are emotionally, physically, financially, or otherwise the average of the five people you spend the most time with.
இந்த கோட்பாடை நான் பொதுவாக கூறினால்.....
நீங்கள் உணர்ச்சி ரீதியாக, உடல்ரீதியாக, நிதி ரீதியாக எப்படி இருப்பீர்கள் என்றால் நாள்தோறும் உங்கள் நேரத்தை அதிகம் எந்தெந்த ஐந்து நபர்களிடம் பங்கிட்டுக் கொள்கிறீர்களோ அந்த ஐந்து நபர்களின் சராசரி பண்புகள் கொண்டவனாக தான் திகழ்வீர்.
Look at the people around you.
Are they who you want to be?
Because that’s probably what you’ll become.
ஆகையால் உங்களைச் சுற்றி இருக்கும் மக்களை கவனியுங்கள்.
நீங்கள் அவர்களைப் போல ஆக விரும்புகிறீர்கள்?
ஏனென்றால் கூடிய விரைவில் நீங்களும் அவர்களைப் போல ஆகிவிடுவீர்கள் என்பது உறுதி. .
And by the same token, if you have kids or employees, think about the influence you’re having on them.
Not your words, but your actions.
அதே போல உங்களுக்கு குழந்தைகளோ அல்லது ஊழியர்களோ இருந்தால், உங்கள் செயல்கள் எப்படி அவர்களுடைய செயல்களை பாதிக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.
உங்களுடைய வார்த்தைகள் அல்ல, உங்களுடைய செயல்கள் தான் அவர்களை பெரிதும் பாதிக்கும். இதை நினைவில் வையுங்கள்.
As mega-bestselling author Paulo Coelho says in the book:
"The world is changed by your example, not by your opinion"
இதை தான் விற்பனையில் பெரிய சாதனை படைத்த புத்தக எழுத்தாளரான பாலோ கொலஹோ ஒரு புத்தகத்தில் கூறுகிறார்:
"உலகம் உங்கள் வாழ்க்கையை தான் பின்பற்றும் உங்கள் கருத்துகளை அல்ல".
Written in English
by
Eric Barker
Tamil translation by
Ezhilarasan Venkatachalam, Salem
ஆங்கிலத்தில் எழுதியது
எரிக் பர்க்கர்
தமிழ் மொழிபெயர்ப்பு
எழிலரசன் வெங்கடாசலம்
தமிழ் வழி ஆங்கில ஆசிரியர்
சேலம்
........................................................
Post Script :
This is a small chunk of a big article I happen to come across. Worth reading.
பின் குறிப்பு:
நான் படிக்க நேர்ந்த
ஒரு பெரிய கட்டுரையின் ஒரு சிறிய பகுதி இது. நல்ல தகவல். நீங்களும் அவசியம் படிக்கவும்.
Comments