12 Tips to success -in Tamil நீங்கள் வெற்றியாளரா சுய பரிசோதனை செய்ய 12 வழிமுறைகள்! #SuccessTips .................. நீங்கள் வெற்றியாளரா, தோல்வியாளரா? இப்படி ஒரு கேள்வியை யாரும் விரும்ப மாட்டார்கள் என்பதே உண்மை. ஏனெனில், எல்லோருமே வெற்றிப்படியை எட்டிப் பிடிக்கவே ஆசைப்படுகிறோம். ஆனால்,வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் சில விஷயங்களில் வித்தியாசம் உண்டு. குறிப்பாக 12 விஷயங்களில்! அவற்றைத் தெரிந்து கொண்டு, சரியான வழிமுறைகளக் கடைப்பிடித்தாலே போதும். நீங்களும் வெற்றியாளரே! அவை... 01 பிழைகள் வெற்றியாளர்: தன் மேலுள்ள தவறை பிறர் சுட்டிக்காட்டும்போது அதனை எதிர்க்க மாட்டார்; ஏற்றுக்கொண்டு அதைச் சரிசெய்துகொள்வதற்கான வழிமுறைகளை யோசிப்பார் . தோல்வியாளர்: தன் தவறை மற்றவர் மீது சுமத்திவிட்டு, தான் எப்படித் தப்பிக்கலாம் என்று யோசிப்பார். தன்னுடைய தவறைத் திருத்திக்கொள்ள எந்த முயற்சியையும் மேற்கொள்ள மாட்டார். 02 எண்ண ஓட்டம் வெற்றியாளர்: இயற்கையாகவே உறுதியான எண்ண ஓட்டத்தைக் கொண்டிருப்பார். தன் உணர்சிகளையும் கருத்துகளையும் நல்லெண்ண அடிப்படையிலேயே சிந்திப்பவர் இவர். ...
Soft Skills and Personality Development articles in Tamil and English // பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் கட்டுரைகள், சுய முன்னேற்ற கட்டுரைகள்