Correcting SOUR LEMON JUICE or BE BUSY DOING MORE GOOD
.
"BE BUSY DOING MORE GOOD
... RATHER THAN TRYING TO CORRECT THE WRONG YOU HAVE DONE..." --
(version 02 sandwiched)
Can you remove extra lemon from water?
தண்ணீரிலிருந்து கூடுதல் எலுமிச்சை சுவையை நீக்க முடியுமா?
I still remember the day I was preparing fresh lime water for the first time.
நான் முதல் முறையாக புதிய எலுமிச்சை ஜுஸ் தயார் செய்த நாள் எனக்கு நினைவில் உள்ளது.
I ended up adding almost five times the amount of lemon than needed. It was a disaster. I had to correct it anyhow.
நான் தேவையான அளவுக்கு அதிகமாக எலுமிச்சை ஜூஸை சேர்த்து விட்டேன் --
கிட்டத்தட்ட ஐந்து மடங்கு. இது எனக்கு ஒரு பெரும் பிரச்சனை ஆகிவிட்டது. நான் எப்படியாவது அதை சரிசெய்ய வேண்டும் என்று எண்ணினேன்.
I wish I could remove some lemon juice from the water to make it taste perfect again!
ஆனால் தண்ணீரில் இருந்து எலுமிச்சை பழச்சாறை மீண்டும் வெளியே எடுக்க முடியாதே.
But alas! Some things can never be undone. Some things can never be changed.
ஆமாம்! அது போல சில விஷயங்களை ஒருபோதும் நம்மால் மாற்ற முடியாது.
There was no way that I know of, to remove the extra lemon juice.
கூடுதல் எலுமிச்சை சாறை நீக்க வழி இல்லை.
So what was the solution then?
அப்படியானால் தீர்வு என்ன?
The only way to correct this was to add one more glass of water and dilute the lemon juice and make it five glasses.
இதை சரி செய்ய ஒரே வழி,
மேலும் ஒரு குவளை தண்ணீரை அதில் சேர்க்க வேண்டும். பிறகு அது ஐந்து குவளை ஜூஸ் ஆகிவிடும்.
This made me think..
இது என்னை யோசிக்க வைத்தது.
Sometimes we cannot undo some things that have gone wrong in life.
வாழ்க்கையில் சில சமயங்களில் நாம் செய்த தவறான சில விஷயங்களை நம்மால் சரிசெய்ய முடியாது.
Some wrong decisions, wrong choices, wrong investments, wrong actions, wrong associations, wrong words or wrong doings can never be undone.
தவறான முடிவுகள், தவறான முதலீடுகள், தவறான செயல்கள், தவறான அமைப்புகள், தவறான சொற்கள் அல்லது தவறான செயல்கள் ஆகியவை ஒருபோதும் சரிசெய்ய முடியாது.
So what is the solution then?
அப்படியானால் இதற்கு தீர்வு என்ன?
When you cannot correct what is wrong, do not waste more time over it.
தவறானதை நீங்கள் சரிசெய்ய முடியாதபோது, அதற்காக அதிக நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
It is like attempting to remove lemon from water.
இது தண்ணீரிலிருந்து எலுமிச்சை சாறை நீக்க முயற்சி செய்வது போல.
Instead, get busy in adding so many right things in your life that the wrong seems insignificant.
அதற்கு பதிலாக, உங்கள் வாழ்க்கையில் பல நல்ல விஷயங்களைச் சேர்ப்பதில்
பிசியாக இருங்கள்.
விரைவில் கெட்டவைகளை இதனுடன் ஒப்பிட்டால் குறைவாக தெரியும்.
We all have a negative side to ourselves. We may not be able to remove or correct all our negativities.
நம் அனைவருக்கும்
எதிர்மறையான பக்கங்கள் உண்டு. நம்முடைய எதிர்மறைகளை அகற்றவோ அல்லது திருத்தவோ நம்மால் முடியாது.
But we can definitely continue adding positive thoughts, positive reading and positive people in our lives and dilute the negativity.*
ஆனால் நிச்சயமாக நாம் நேர்மறையான எண்ணங்களை, நேர்மறையான வாசிப்பு மற்றும் நேர்மறையான நபர்களை நம் வாழ்வில் சேர்ப்பதோடு, எதிர் மறை விஷயங்களை நீர்த்துப்போகச் செய்யலாம்.
We all have to deal with some easy people and some difficult people in our lives.
நாம் அனைவரும் நம் வாழ்வில் சில எளிமையான மக்களையும் சில கடினமான மக்களையும் சமாளிக்க வேண்டியது இருக்கலாம்.
Do not waste time trying to change the difficult people.
கடினமான மக்களை மாற்ற முயற்சித்து உங்கள்
நேரத்தை வீணாக்காதீர்கள்.
You will drain all your emotional energy in vain.
அது தேவை இல்லாமல் உங்கள் உணர்ச்சியையும் ஆற்றலையும் உறிஞ்சிவிடும்.
Instead spend more time with the pleasant positive genuinely true people who value you & your presence in their life, who stand by you whenever you need
அதற்கு பதில், உங்கள் வாழ்க்கையில் உங்கள் இருப்பை மதிக்கும் நேசமான நேர்மறையான உண்மையான மக்களுடன் அதிக நேரத்தை செலவிடுங்கள்.
...and the difficult people will not affect you any more.
அப்படி செய்தால், கடினமான நபர்கள் உங்களை பாதிக்க மாட்டார்கள்.
Everything in your life will never be perfect.
உங்கள் வாழ்க்கையில் எல்லாமே எப்போதும் பரிபூரணமாக இருக்காது.
Do not waste too much time correcting what is wrong.
தவறானதை சரிசெய்ய அதிக நேரத்தை வீணாக்க வேண்டாம்.
Get busy doing the right things.
சரியான விஷயங்களைச் செய்வதில் பரபரப்பாக இருங்கள்.
Its still January 2018
இது இன்னும் ஜனவரி 2018 தான்.
Thanks to Shabbir, Salem (HCMS78) for providing above matter in English
THIS ARTICLE ALSO REMINDS
ME ABOUT MY MENTOR
KSM SIR -
WHO INSTALLED
POSITIVE THINKING
IN ME.
=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=
Ezhilarasan Venkatachalam
Tamil Based English Trainer
SALEM, South India.
Comments